இந்தியா

டுவிட்டர் மூலம்தான் வரவேற்பு: பிரதமர் மோடி வரவேற்பு குறித்து கெலாட் அதிரடி

Published On 2023-07-27 05:45 GMT   |   Update On 2023-07-27 05:45 GMT
  • பிரதமர் மோடி இன்று ராஜஸ்தான் செல்கிறார்
  • பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில், கெலாட் பேசக்கூடிய கருத்துகள் நீக்கம்

ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மத்திய பிரதேச மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான தேர்தல் பிரசாரத்தை பா.ஜனதா தொடங்கியுள்ளது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். அந்த வகையில் இன்று பிரதமர் மோடி மத்திய பிரதேச மாநிலம் சிகர் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், பல்வேறு பணிகளை தொடங்கி வைக்கிறார்.

ராஜஸ்தான் மாநிலம் வரும் பிரதமர் மோடியை, அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் வரவேற்பதாக இருந்தது. ஆனால், மோடி கலந்து கொள்ளும் விழாவில் அசோக் கெலாட் பேசுவதாக இருந்தது. ஆனால் பிரதமர் மோடி அலுவலகம் அவரது பேச்சை நீக்கிவிட்டது. இதனால் தன்னால் உங்களை வரவேற்று பேச முடியாது. டுவிட்டர் மூலம் வரவேற்கிறேன் என அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

பொதுவாக பிரதமர் மோடி கலந்து கொள்ளும் விழாவில், இடம்பெறக் கூடிய பேச்சுகள் குறித்த ஆவணங்கள் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அந்த வகையில் அனுப்பி வைத்ததில் அசோக் கெலாட் பேச்சு நீக்கப்பட்டுள்ளது.

அசோக் கெலாட் தனது டுவிட்டர் பக்கத்தில் ''மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களே, நீங்கள் இன்று ராஜஸ்தான் வருகிறீர்கள். நிகழ்ச்சி நிரலுக்கான என்னுடைய பேச்சை பிரதமர் அலுவலகம் நீக்கியுள்ளது. ஆகவே, பேச்சு மூலம் தங்களை வரவேற்க முடியாது. இந்த டுவிட்டர் மூலம் தங்களை மனதார வரவேற்கிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், தன்னுடைய பேச்சால் பல கருத்துகளை முன் வைத்திருப்பேன் என்ற கெலாட், ஆறு மாதங்களில் 7-வது முறையாக ராஜஸ்தான் வரும் பிரதமர் மோடி, அதை நிறைவேற்றுவார் என நம்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News