சாவர்க்கர், கோட்சே ஆதரவாளர்களால் ராகுல் உயிருக்கு அச்சறுத்தல் - பாதுகாப்பு கோரி நீதிமன்றத்தில் மனு
- வழக்கு தொடர்ந்துள்ள நபரின் தாத்தாவினுடைய ஆதரவாளர்கள் இப்போது ஆட்சி அதிகாரத்தில் உள்ளனர்.
- குற்ற பின்னணியுடன் தொடர்புடைய வரலாறு இருக்கிறது.
2023 ஆம் ஆண்டு லண்டன் சென்றிருந்தபோது சாவர்க்கரை குறிவைத்து ராகுல் காந்தி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார்.
இந்துத்துவா சித்தாந்தவாதிக்கு எதிராக இழிவான கருத்துக்களைத் தெரிவித்ததாகக் கூறி, சாவர்க்கரின் பேரன் ராகுல் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு வழக்கு புனே நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த சூழலில், ராகுல் காந்தியின் வழக்கறிஞர் பவார் நீதிமன்றத்தில் ஒரு மனுவை சமர்ப்பித்துள்ளார். அதில் சாவர்க்கர் மற்றும் நாதுராம் கோட்சே ஆதவலர்களால் ராகுல் காந்தியின் உயிருக்கு அச்சறுத்தல் இருப்பதாகவும், அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
அந்த மனுவில், வழக்கு தொடர்ந்துள்ள நபரின் தாத்தாவினுடைய ஆதரவாளர்கள் இப்போது ஆட்சி அதிகாரத்தில் உள்ளனர்.
இதனால் வழக்கில் ஆதிக்கம் செலுத்துவது அல்லது அழுத்தம் கொடுக்கும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.
நமது தேசதந்தை மகாத்மா காந்தி கொலை வழக்கில் தொடர்புள்ள நாதுராம் கோட்சே, அவரின் தம்பி கோபால் கோட்சே ஆதவாளர்களுடன் மனுதாரருக்கு நேரடி தொடர்புள்ளது.
எனவே குற்ற பின்னணியுடன் தொடர்புடைய வரலாறு இருப்பதால், அதுபோன்ற சூழ்நிலை மீண்டு வந்துவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கைக்காக மனு வழங்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.
அவதூறு வழக்கு தொடர்ந்து சாவர்க்கர் பேரன் இதன் மூலம் அரசியல் ரீதியாக ஆதாயங்களை பெற வாய்ப்புள்ளதாகவும் பவார் தெரிவித்துள்ளார்.