சின்னசாமி மைதான கூட்ட நெரிசலில் 11 பேர் பலி: ராகுல் காந்தி இரங்கல்
- பெங்களூரு சின்னசாமி மைதானத்திள் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.
- இச்சம்பவத்துக்கு பிரதமர் மோடி, முதல் மந்திரி சித்தராமையா உள்பட பலர் இரங்கல் தெரிவித்தனர்.
பெங்களூரு,
பெங்களூரு சின்னசாமி மைதானத்திள் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு பிரதமர் மோடி, முதல் மந்திரி சித்தராமையா உள்பட பலர் இரங்கல் தெரிவித்தனர்.
இந்நிலையில், பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ராகுல் காந்தி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:
பெங்களூரு சின்னசாமி மைதானம் அருகே ஆர்.சி.பி. அணியின் ஐ.பி.எல். வெற்றி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட துயரமான கூட்ட நெரிசல் சம்பவம் வேதனை அளிக்கிறது.
இந்த சமயத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது இரங்கல்கள். காயமடைந்த அனைவரும் விரைவாகவும், முழுமையாகவும் குணமடைய விரும்புகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு கர்நாடக அரசு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும்.
எந்தக் கொண்டாட்டமும் மனித உயிருக்கு நிகரானது அல்ல என்பதை இந்த சோகமான சம்பவம் நமக்கு நினைவூட்டுகிறது.
பொது நிகழ்வுகளுக்கான பாதுகாப்பு நெறிமுறைகள் தகுந்த முறையில் மதிப்பாய்வு செய்யப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும். மனித உயிர்கள்தான் எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.