இந்தியா
அப்பா உங்கள் கனவை நிறைவேற்றுவதே குறிக்கோள்- ராகுல் காந்தி
- ராஜீவ்காந்தியின் பிறந்தநாளை நாடு முழுவதும் காங்கிரசார் கொண்டாடி வருகின்றனர்
- ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பால் வலுவாக நிற்கிறது.
புதுடெல்லி:
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்தநாளை நாடு முழுவதும் காங்கிரசார் கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி அவரது மகனும், பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-
இந்தியா என்பது ஒவ்வொரு குடிமகனும் மதிக்கப்படுகிற நல்லெண்ணம் இருக்கும் இடத்தில், ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பால் வலுவாக நிற்கிறது. அப்பா, உங்கள் கனவை நிறைவேற்றுவதே எனது வாழ்க்கையின் இலக்காகும் என்று குறிப்பிட்டுள்ளார்.