இந்தியா

ஹரியானாவுக்கு கூடுதலாக ஒரு சொட்டு நீர் கூட வழங்க முடியாது: பஞ்சாப் அரசு தீர்மானம்

Published On 2025-05-05 15:36 IST   |   Update On 2025-05-05 15:36:00 IST
  • எந்வொரு மாநிலத்திற்கும் தண்ணிர் வழங்க பஞ்சாபிடம் தண்ணீர் இல்லை.
  • ஹரியானாவிற்கு குடிநீர் தேவைக்காக வழங்கப்படும் 4,000 கனஅடி தண்ணீர் மனிதாபிமான அடிப்படையில் தொடரும்.

பஞ்சாப் மாநிலம் அண்டை மாநிலமான ஹரியானாவுக்கு தண்ணீர் வழங்கி வருகிறது. இரு மாநிலங்களுக்கும் இடையில் தண்ணீர் பகிர்ந்து கொள்வது தொடர்பாக ஒப்பந்தம் உள்ளது. ஏப்ரல மாதம் குடிநீர் தேவைக்காக ஹரியானா மாநிலம் பஞ்சாபிடம் கூடுதலாக நீர் திறந்து விட வலியுறுத்தியது. ஆனால் பஞ்சாப் தங்களிடம் போதுமான தண்ணீர் இருப்பு இல்லை எனத் தெரிவித்தது.

இந்த நிலையில் பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியத்தை அரியானாவும், மத்திய அரசும் கூட்டி பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஹரியான மாநிலத்திற்கு தண்ணீர் திறந்து விட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதனால் பஞ்சாப் அரசு கடுங்கோபம் அடைந்தது. அத்துடன் ஹரியானாவிற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றுள்ளது.

சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்டி பஞ்சாப் மாநில நீர்வளத்துறை அமைச்சர் பரிந்தர் குமார் கோயல் இந்த தீர்மானம் கொண்டு வந்தார்.

அந்த தீர்மானத்தில் கூறியிருப்பதாவது:-

மார்ச் 31ஆம் தேதி வரைக்கும் ஹரியானா அனைத்து பங்கீடு நீரையும் பயன்படுத்தியுள்ளது. தற்போது பாஜக பஞ்சாப் மாநில தண்ணீரை ஹரியானாவுக்கு வழங்க விரும்புகிறது.

கால்வாய் மூலம் விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்க பஞ்சாப் அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கான வேலைகள் முழு வீச்சில் மிகப்பெரிய அளவில் நடைபெற்று வருகிறது. 2021 வரை வெறும் 22 சதவீது பஞ்சாப் நிலை நிலங்கள் கால்வாய் தண்ணீரை பெற்று வந்தன. ஆனால் இன்று, 60 சதவீத விவசாய நிலங்கள் கால்வாய் தண்ணீரை வெற்றி பெற்று வருகிறது.

பஞ்சாபின் ஒரு சொட்டு நீர் கூட பஞ்சாப் மாநிலத்திற்கு மிகவும் மதிப்பிற்குரியதாகியுள்ளது. எந்வொரு மாநிலத்திற்கும் தண்ணிர் வழங்க பஞ்சாபிடம் தண்ணீர் இல்லை.

ஹரியானநா அரசு கடந்த மாதம் 6ஆம் தேதி குடிநீர் வசதிக்காக தண்ணீர் திறந்து விட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தது. அதன்படி 4 ஆயிரம் கனஅடி நீர் திறந்த விடப்பட்டது. தாகம் எடுத்த எவருக்கும் தண்ணீர் கொடுப்பது ஒரு சிறந்த நற்பண்பு என்று நமது குருமார்கள் நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளனர்.

ஹரியானாவில் மொத்தம் 3 கோடி மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் குடிநீர் மற்றும் மனித தேவைகளுக்காக 1700 கனஅடி நீர் போதுமானது. தற்போது திடீரென ஹரியானா 8500 கனஅடி நீர் தேவை எனச் சொல்கிறது. பஞ்சாப் அதன் தேவையை பூர்த்தி செய்ய கூடுதல் தண்ணீர் இல்லை.

எனவே, பாஜக அரசியலமைப்பிற்கு விரோதமான மற்றும் சட்டவிரோதமான முறையில் பிபிஎம்பி கூட்டத்தை வலுக்கட்டாயமாகக் கூட்டி, பஞ்சாப் தனது சொந்தப் பங்கிலிருந்து ஹரியானாவிற்கு தனது தண்ணீரை வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. இது எங்களுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.

ஹரியானாவிற்கு குடிநீர் தேவைக்காக வழங்கப்படும் 4,000 கனஅடி தண்ணீர் மனிதாபிமான அடிப்படையில் தொடரும், ஆனால் ஒரு சொட்டு கூட கூடுதலாக வழங்கப்படாது.

இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News