இந்தியா

புனே சொகுசு கார் விபத்து வழக்கில் சிறுவனின் தாத்தா கைது

Published On 2024-05-25 05:07 GMT   |   Update On 2024-05-25 05:07 GMT
  • விபத்தை ஏற்படுத்தியபோது சிறுவன் மதுபோதையில் இருந்துள்ளான்.
  • அவரது தந்தை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் 17 வயது சிறுவன் மதுபோதையில் ஓட்டி வந்த சொகுசு கார் (Porsche) மோதியதில் இரண்டு ஐ.டி. ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் அந்த சிறுவனை காப்பாற்ற மறைமுக வேலைகள் நடைபெற்றன.

ஆனால் உறவினர்கள், ஊடகங்கள் கடுமையாக எதிர்த்ததன் விளைவாக அந்த சிறுவனின் ஜாமின் ரத்து செய்யப்பட்டு சிறார் முகாமில் அடைக்கப்பட்டுள்ளான். அவரது தந்தை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். காவல் அதிகாரிகள் இருவர் கடமை தவறியதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அந்த சிறுவனின் தாத்தா கைது செய்யப்பட்டுள்ளார். அவர்களுடைய குடும்ப டிரைவர் தவறாக மறைத்து வைத்த குற்றத்திற்காக போலீசார் கைது செய்துள்ளனர்.

குடும்ப டிரைவர்தான் இந்த விபத்தை ஏற்படுத்தினார் என இந்த வழக்கை திசைதிருப்ப அந்த சிறுவனின் குடும்பத்தினர் சதி செய்துள்ளனர். இது தொடர்பாக டிரைவரின் குடும்பத்தினர் புகார் அளித்ததன் அடிப்படையில் போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

சிறுவனின் தாத்தா மற்றும் தந்தை டிரைவரின் போனை எடுத்து வைத்துக் கொண்டு அவர்களுடைய பங்களா வீட்டில் மே 19-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை மறைத்து வைத்துள்ளனர். பின்னர் அவரது மனைவி விடுவித்துள்ளார்.

Tags:    

Similar News