இந்தியா

ஆந்திராவில் 4 குழந்தைகள் பெற்றால் சொத்து வரி விலக்கு- அமலுக்கு வருகிறது புதிய சட்டம்

Published On 2025-07-24 21:39 IST   |   Update On 2025-07-24 21:39:00 IST
  • ஆந்திராவில் 12 சதவீத பெண்கள் கருவுறுத்தல் சிக்கல்களை சந்தித்து வருகின்றனர்.
  • 3,4-வது குழந்தை பெற்றெடுக்கும் பெண்களுக்கு அரசு சார்பில் ரூ 50 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

ஆந்திராவில் 2047-ம் ஆண்டுக்குள் முதியவ ர்களின் எண்ணிக்கை 23 சதவீதமாக உயரக்கூடும் என்பதால் அதை மனதில் கொண்டு மக்கள் தொகையை உயர்த்த மேலாண்மை திட்டத்தை மாநில அரசு தயாரித்து வருகிறது.

அதன்படி குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட காலத்திற்கு பின்பற்ற வேண்டிய உக்திகள் குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.

ஆந்திராவில் 12 சதவீத பெண்கள் கருவுறுத்தல் சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். இதனால் அவர்கள் செயற்கை முறை கருத்தரித்தல் மையங்களை தேடி செல்கின்றனர்.

செயற்கை முறை கருத்தலுக்கு ரூ.80 ஆயிரம் வரை செலவாகிறது. இதற்கான நிதி உதவியை மாநில அரசு வழங்க முன் வந்துள்ளது. இதேபோல் 4 குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் குடும்பத்திற்கு சொத்து வரிகளில் இருந்து விலக்கு அளிக்க உள்ளது.

3,4-வது குழந்தை பெற்றெடுக்கும் பெண்களுக்கு அரசு சார்பில் ரூ 50 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

6 மாதங்களாக இருந்த மகப்பேறு விடுப்பு 12 மாதங்களாக உயர்த்தபட உள்ளது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்களின் குழந்தைகளை பராமரிக்க பராமரிப்பு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

விரைவில் இதுகுறித்து புதிய சட்டம் அமலுக்கு வர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சலுகை திட்டங்களால் ஆந்திராவில் உள்ள பெண்கள் உற்சாகமாக உள்ளனர்.

Tags:    

Similar News