இந்தியா

பிரதமர் மோடி

ஜி7 மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்றடைந்தார் பிரதமர் மோடி

Published On 2023-05-19 11:20 GMT   |   Update On 2023-05-19 11:20 GMT
  • ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பானின் ஹிரோஷிமா சென்றடைந்தார் பிரதமர் மோடி.
  • 3 நாடுகள் பயணத்தில் 40-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

புதுடெல்லி:

வளர்ந்த நாடுகளை உள்ளடக்கிய ஜி7 கூட்டமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு, ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் இன்று தொடங்கி 21-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே, ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பானின் ஹிரோஷிமா நகருக்கு பிரதமர் மோடி இன்று டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றார். உணவு, உரம், எரிசக்தி பாதுகாப்பு உள்பட உலகம் எதிர்கொண்டுள்ள பல்வேறு சவால்கள் குறித்து அந்த மாநாட்டில் அவர் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஜி7 மாநாட்டில் பங்கேற்கதற்காக ஜப்பான் தலைநகர் ஹிரோஷிமா சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி. அவரை அதிகாரிகள் வரவேற்றனர்.

ஜி7 உச்சி மாநாட்டையொட்டி பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் பிரதமர் மோடி, ஹிரோஷிமாவில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையையும் திறந்து வைக்க உள்ளார்.

ஜப்பானைத் தொடர்ந்து, பப்புவா நியூகினியாவுக்கு மே 22-ம் தேதி செல்கிறார். அங்கு நடைபெறவிருக்கும் இந்திய-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு அமைப்பின் 3-வது உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார். அதன்பின், ஆஸ்திரேலியாவுக்கு பயணமாகும் அவர், அந்நாட்டின் பிரதமர் ஆண்டனி அல்பானீசிடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

Tags:    

Similar News