இந்தியா

பிரதமர் மோடி நாளை முதல் 3 நாடுகளுக்கு 5 நாள் சுற்றுப்பயணம்!

Published On 2025-06-14 13:33 IST   |   Update On 2025-06-14 13:33:00 IST
  • கனடா பிரதமர் மார்க் கார்னியின் அழைப்பின் பேரில், G-7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
  • குரோஷியாவுக்குப் பயணம் மேற்கொள்ளும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை மோடி பெறுகிறார்.

பிரதமர் மோடி, ஜூன் 15 (நாளை) முதல் 19 வரை சைப்பிரஸ், கனடா, மற்றும் குரோஷியா ஆகிய மூன்று நாடுகளுக்கு 5 நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

சைப்பிரஸ் (ஜூன் 15-16): சைப்பிரஸ் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடோலிடஸின் அழைப்பின் பேரில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு இந்தியப் பிரதமர் அந்நாட்டுக்கு பயணம் மேற்கொள்கிறார். இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மற்றும் வணிகத் தலைவர்களுடனான சந்திப்புகள் நடைபெறும்.

கனடா (ஜூன் 16-17): கனடா பிரதமர் மார்க் கார்னியின் அழைப்பின் பேரில், G-7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இது அவரது ஆறாவது G-7 உச்சி மாநாட்டுப் பங்கேற்பாகும். எரிசக்தி பாதுகாப்பு, தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு மற்றும் குவாண்டம் aagiyvatrபோன்ற உலகளாவிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும்.

குரோஷியா (ஜூன் 18-19): குரோஷியாவுக்குப் பயணம் மேற்கொள்ளும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை மோடி பெறுகிறார்.அங்கு, பிரதமர் ஆண்ட்ரே பிளென்கோவிச் மற்றும் அதிபர் ஜோரன் மிலானோவிக் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்துவார்.

இந்த மூன்று நாடுகளுகான பயணம், மத்திய தரைக்கடல் பிராந்தியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இந்தியாவின் உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News