உலகம்

வாஷிங்டன் சென்றடைந்தார் பிரதமர் மோடி- விமான தளத்தில் உற்சாக வரவேற்பு

Published On 2023-06-21 21:16 GMT   |   Update On 2023-06-22 00:48 GMT
  • இரு நாட்டு தேசிய கீதங்கள் விமானப்படை தளத்தில் இசைக்கப்பட்டன.
  • வாஷிங்டன் டிசியில், பிரதமர் ஜோபைடனுடன் இருதரப்பு சந்திப்பை நடத்துகிறார்.

அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்குசென்றுள்ளார். சர்வதேச யோகா தினம் நேற்று கொண்டாடப்பட்டது.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஐ.நா. சபை வளாகத்தில் உள்ள புல்வெளியில் நேற்று பிரமாண்ட யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்கிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஐ.நா. உயர் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் 180க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வந்திருந்த தூதர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு யோகாசனம் செய்தனர். மேலும், இந்நிகழ்ச்சி கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

இதையடுத்து, பிரதமர் மோடி நியூயார்க்கில் இருந்து வாஷிங்டனுக்கு புறப்பட்டார். பின்னர், வாஷிங்டன் டிசியில் உள்ள ஆண்ட்ரூஸ் என்ற விமான தளத்திற்கு வந்தடைந்ததும், பிரதமர் நரேந்திர மோடிக்கு வரவேற்பு மற்றும் மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. 

அவரது வருகையை குறிக்கும் வகையில் இரு நாட்டு தேசிய கீதங்கள் விமானப்படை தளத்தில் இசைக்கப்பட்டன. அங்கு பிரதமர் மோடி இரண்டு சிறு குழந்தைகளிடமிருந்து ஒரு பூங்கொத்தை பெற்றார்.

இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தனது டுவிட்டர் பக்கத்தில், "பிரதமர் மோடியின் உத்தியோகபூர்வ அரசு பயணம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி வாஷிங்டன் டிசியில் உள்ள ஆண்ட்ரூஸ் விமான நிலையத்தில் காலடி எடுத்து வைக்கும் போது அவருக்கு சம்பிரதாய வரவேற்பும் மரியாதையும் அளிக்கப்பட்டது. வாஷிங்டன் டிசியில், பிரதமர் ஜோபைடனுடன் இருதரப்பு சந்திப்பை நடத்துகிறார். அமெரிக்க காங்கிரஸின் கூட்டு அமர்வில் உரையாற்றுவார்" என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News