இந்தியா

அவங்க தான் காரணம்.. ஃபேஸ்புக் நேரலையில் தற்கொலை செய்து கொண்ட சாமியார்!

Published On 2023-05-01 21:53 GMT   |   Update On 2023-05-01 21:53 GMT
  • போலீசார் ராம் சங்கர் தாஸ்-க்கு அழுத்தம் கொடுத்ததாக தெரிகிறது.
  • ராம் சங்கர் தாஸ், தான் பயன்படுத்தி வந்த ஆடையை கயிறாக்கி, அதில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

அயோத்தியை சேர்ந்த 28 வயதான பூசாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நரசிம்மா கோயிலில் பூசாரியாக இருந்து வந்த ராம் சங்கர் தாஸ், போலீசார் தனக்கு தொல்லை கொடுத்ததாலேயே, இந்த முடிவை எடுத்ததாக கூறியிருக்கிறார்.

கடந்த ஜனவரி மாதம் 80 வயது முதியவர் ராம் சரன் தாஸ் காணாமல் போன வழக்கில் போலீசார் ராம் சங்கர் தாஸ் மீது சில தினங்களுக்கு முன்பு தான் வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பாக போலீசார் ராம் சங்கர் தாஸ்-க்கு அழுத்தம் கொடுத்ததாக தெரிகிறது. இதையடுத்து ராம் சங்கர் தாஸ் இரண்டு நாட்களாக விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்துள்ளார்.

இதனால் ராம் சங்கர் தாஸ்-ஐ தேடிய போலீசார், அவரது அறையை திறந்து பார்த்தனர். அப்போது ராம் சங்கர் தாஸ் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளது. ராம் சங்கர் தாஸ், தான் பயன்படுத்தி வந்த ஆடையை கயிறாக்கி, அதில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

மேலும் தற்கொலையை ஃபேஸ்புக்கில் லைவ் செய்திருக்கிறார். ஃபேஸ்புக் லைவ் வீடியோவில், ராம் சங்கர் தாஸ், ராய்கஞ்ச் போலீஸ் அவுட்போஸ்ட் மற்றும் கான்ஸ்டபில் மீது குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து கோட்வாலி காவல் நிலைய அதிகாரி மனோஜ் சர்மா கூறும் போது, "பூசாரி ராம் சங்கர் தாஸ் போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். போதை பழக்கம் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இவர் போலீசார் மீது வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்," என்று தெரிவித்தார்.

மேலும், இரண்டு நாட்களாக விசாரணைக்கு ராம் சங்கர் தாஸ் ஆஜராகவில்லை. இதன் காரணமாக அவரது அறைக்குள் சென்றோம். அங்கு அவரது உடல் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை துவங்கி நடைபெற்று வருகிறது, என்று அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News