இந்தியா
அம்பேத்கர் பிறந்தநாள் - உருவப்படத்திற்கு குடியரசு தலைவர், பிரதமர் மலர் தூவி மரியாதை
- டாக்டர் அம்பேத்கரின் 135-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
- அண்ணல் அம்பேத்கரின் உருவப்படத்திற்கு பிரதமர் மோடி, ராகுல்காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
நாடு முழுவதும் சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 135-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அரசியல் தலைவர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள பிரேரண ஸ்தலத்தில் அண்ணல் அம்பேத்கரின் உருவப்படத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, ராகுல்காந்தி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.