இந்தியா
பிரதமர் மோடி தலைமையில் நாளை நிதி ஆயோக் கூட்டம்
- மாநில மற்றும் யூனியன் பிரதேச மாநில முதல்வர்கள் கலந்து கொள்கிறார்கள்.
- விக்சித் பாரத் 2047 திட்டத்திற்காக மாநிலங்கள் மீது கவனங்கள் செலுத்தக்கூடிய விசயங்கள் தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்படும்.
பிரதமர் மோடி தலைமையில் நாளை நிதி ஆயோக்கின் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேச மாநில முதல்வர்கள் மற்றும் மத்தயி அமைச்சர்கள் கலந்த கொள்கிறார்கள்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நடத்தும் முதல் ஆலோசனைக் கூட்டம் ஆகும்.
இந்த கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2015ஆம் ஆண்டும் முதல் கூட்டம் நடைபெற்றது. நாளை நடைபெறுவது 10ஆவது கூட்டம் ஆகும்.
விக்சித் பாரத் 2047 திட்டத்திற்காக மாநிலங்கள் மீது கவனங்கள் செலுத்தக்கூடிய விசயங்கள் தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார்.