இந்தியா

ஆதித்யா எல் 1 விண்கலம்- இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

Published On 2023-09-02 08:01 GMT   |   Update On 2023-09-02 08:01 GMT
  • ராக்கெட்டின் செயல்பாடுகள் திட்டமிட்டபடி நடந்து வருவதாக இஸ்ரோ அறிவிப்பு.
  • ஆதித்யா எல் 1 சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் திட்டமிட்டப்படி இன்று பகல் 11.50 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

ராக்கெட்டின் செயல்பாடுகள் திட்டமிட்டபடி நடந்து வருவதை தொடர்ந்து, ஆதித்யா எல் 1 சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

இந்நிலையில், ஆதித்யா எல்1 விண்கலத்தை வெற்றிகரமாக ஏவிய விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

சந்திரயான் வெற்றியை தொடர்ந்து, இந்தியா தனது விண்வெளி பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ஒட்டுமொத்த மனித குலத்தின் நன்மைக்காக பிரபஞ்சத்தை பற்றிய சரியான புரிதலுக்காக விஞ்ஞான முயற்சிகள் தொடரும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

Tags:    

Similar News