இந்தியா
2 ஆம் உலகப்போர் வெற்றி அணிவகுப்பு.. பிரதமர் மோடி ரஷியா செல்லமாட்டார் என தகவல்
- மே 9 அன்று ரஷிய தலைநகர் மாஸ்கோவில் வெற்றி தினம் அணிவகுப்பு நடைபெற உள்ளது.
- இந்த கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க ரஷியா அழைப்பு விடுத்திருந்தது.
இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் நாஜி ஜெர்மனியை சோவியத் யூனியன் வென்றதன் 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், மே 9 அன்று ரஷிய தலைநகர் மாஸ்கோவில் வெற்றி தினம் அணிவகுப்பு நடைபெற உள்ளது.
மே 9, 1945 அன்று ஜெர்மனி, ஸ்டாலின் தலைமையிலான சோவியத் யூனியனிடம் சரணடைந்ததை நினைவுகூரும் வகையிலான இந்த வெற்றி தின அணிவகுப்பு, ரஷியாவின் மிக முக்கியமான வருடாந்திர கொண்டாட்டங்களில் ஒன்றாகும்.
இந்த கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க ரஷியா அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில், ரஷியாவில் நடைபெறும் 2 ஆம் உலகப்போர் வெற்றிவிழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்ள மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அதே சமயம் இந்த விலவ்வில் சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட பல முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்டுகிறது.