இந்தியா

ஜி20 மாநாட்டின்போது பிரதமர் மோடி 15 நாட்டு தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை

Published On 2023-09-08 06:03 GMT   |   Update On 2023-09-08 06:03 GMT
  • பிரதமர் மோடி இன்று அமெரிக்க அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்
  • நாளை ஜப்பான், இங்கிலாந்து, ஜெர்மனி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்

ஜி20 உச்சி மாநாடு டெல்லியில் நாளை மற்றும் நாளைமறுதினம் நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக பல்வேறு நாட்டு தலைவர்கள் இந்தியா வந்த வண்ணம் உள்ளனர். இதனால் டெல்லி விழாக்கோலம் பூண்டுள்ளது. தலைவர்கள் தங்கும் ஓட்டல்கள், தெருக்கள், சாலைகள் ஜொலிக்கின்றன.

ஜி20 மாநாட்டில் தலைவர்கள் உரையாற்றுவார்கள். பிரதமர் மோடியும் உரையாற்றுவார். ஜி20 மாநாட்டிற்கிடையே இருநாடு தொடர்பான பேச்சுவார்த்தையிலும் பிரதமர் மோடி ஈடுபடுவார். அந்த வகையில் 18 நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி, இருநாடு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்துவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இன்று அமெரிக்க அதிபர், வங்காளதேச பிரதமர், மொரீசியஸ் தலைவர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். நாளை இங்கிலாந்து, ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி தலைவர்களுடன் இருநாட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார்.

ஜி20 மாநாட்டில் உலகம் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.

Tags:    

Similar News