இந்தியா

காமராஜரின் உயரிய சிந்தனை, சமூக நீதி குறித்த உறுதிப்பாடு அனைவருக்கும் ஊக்கமளிக்கும்- பிரதமர் மோடி

Published On 2025-07-15 10:38 IST   |   Update On 2025-07-15 10:38:00 IST
  • இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் முன்னணியில் இருந்தவர் காமராஜர்.
  • சுதந்திரத்திற்குப் பிந்தைய நமது பயணத்தின் வளர்ச்சிக்குரிய ஆண்டுகளில் விலைமதிப்பற்ற தலைமைத்துவத்தை காமராஜர் வழங்கினார்.

தமிழ்நாட்டை 9 வருடங்கள் ஆட்சி செய்த பெருந்தலைவர் காமராஜரின் 123-வது பிறந்தநாளான இன்று கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் காமராஜரின் புகழ்போற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

காமராஜ் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் முன்னணியில் இருந்த அவர், சுதந்திரத்திற்குப் பிந்தைய நமது பயணத்தின் வளர்ச்சிக்குரிய ஆண்டுகளில் விலைமதிப்பற்ற தலைமைத்துவத்தை வழங்கினார். அவரது உயரிய சிந்தனைகளும், சமூக நீதி குறித்த உறுதிப்பாடும் நம் அனைவருக்கும் மகத்தான ஊக்கமளிக்கும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News