டிரம்புடன் பேச ஆவலாக உள்ளேன்- பிரதமர் மோடி
- அமெரிக்காவும், இந்தியாவும் நட்புறவு நாடுகள்.
- இரு நாட்டு மக்களுக்கும் பிரகாசமான, வளமான எதிர்காலத்தைப் பெற நாங்கள் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம்.
புதுடெல்லி:
இந்தியா- அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை தொடர்வதாகவும், எனது மிகவும் நல்ல நண்பர் பிரதமர் மோடியுடன் வரும் வாரங்களில் பேச ஆவலுடன் காத்திருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து இருந்தார்.
இதனை தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டிரம்புடன் பேச ஆவலாக உள்ளதாக பிரதமர் மோடி எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் மோடி கூறுகையில், அமெரிக்காவும், இந்தியாவும் நட்புறவு நாடுகள். எங்கள் வர்த்தக பேச்சுவார்த்தைகள் என்பது இந்தியா-அமெரிக்க கூட்டாண்மையின் வரம்பற்ற திறனைத் திறக்க வழி வகுக்கும் என நான் நம்புகிறேன். இந்த விவாதங்களை விரைவில் முடிக்க தங்களது குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.
அதிபர் டிரம்புடன் பேசவும் நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். நமது இரு நாட்டு மக்களுக்கும் பிரகாசமான, வளமான எதிர்காலத்தைப் பெற நாங்கள் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம் என்று கூறியுள்ளார்.