இந்தியா

கேரளாவில் பாரதிய ஜனதா ஆட்சி அமையும் என மீண்டும் பேசிய பிரதமர் மோடி

Published On 2023-03-29 12:17 IST   |   Update On 2023-03-29 12:17:00 IST
  • பிரதமர் மோடி டெல்லியில் நடந்த பாரதிய ஜனதா அலுவலக திறப்பு விழாவில் கலந்துகொண்டு பேசினார்.
  • இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களில் பாரதிய ஜனதா ஆட்சி அமைந்தது போல கேரளாவிலும் பாரதிய ஜனதா ஆட்சி அமையும்.

புதுடெல்லி:

கேரளாவில் பாரதிய ஜனதா ஆட்சி அமையும் என்று பிரதமர் மோடி கடந்த சில வாரங்களுக்கு முன்பு பேசியிருந்தார். இதற்கு கேரள மாநில மார்க்சிஸ்டு தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் கேரளாவை சேர்ந்த பேராயர் மார் ஜோசப் பாம்பிளானி ரப்பர் விவசாயிகளுக்காக ஒரு கோரிக்கை விடுத்தார். அதில் விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டால் கேரளாவில் இருந்து பாரதிய ஜனதாவுக்கு ஒரு எம்.பி. கிடைக்கும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் பிரதமர் மோடி நேற்று டெல்லியில் நடந்த பாரதிய ஜனதா அலுவலக திறப்பு விழாவில் கலந்துகொண்டு பேசினார். அப்போது கேரளாவிலும் பாரதிய ஜனதா ஆட்சி அமையும் என்று கூறினார். இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களில் பாரதிய ஜனதா ஆட்சி அமைந்தது போல கேரளாவிலும் பாரதிய ஜனதா ஆட்சி அமையும் என்று கூறியிருந்தார்.

ஒரு மாதத்தில் 2-வது முறையாக கேரளாவில் பாரதிய ஜனதா ஆட்சி அமையும் என்று பிரதமர் மோடி பேசியிருப்பது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News