இந்தியா

பாரதி படைப்புகளின் தொகுப்பை வெளியிட்டார் பிரதமர் மோடி

Published On 2024-12-11 14:35 IST   |   Update On 2024-12-11 17:59:00 IST
  • மகாகவியின் முழுமையான படைப்புகளின் 23 தொகுதிகள் சீனி. விசுவநாதனால் தொகுக்கப்பட்டு அல்லயன்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
  • பாரதி அறிஞர் என்று அழைக்கப்படும் சீனி. விசுவநாதனால் தேசியக் கவி பாரதியின் 23 தொகுதிகள் அடங்கிய முழுப்படைப்புகளும் கால வரிசைப்படி தொகுத்கப்பட்டுள்ளன.

புதுடெல்லி:

கவிஞரும், சுதந்திரப் போராட்ட வீரருமான சுப்பிரமணிய பாரதியின் முழுமையான படைப்புகளின் தொகுப்பை இன்று டெல்லியில் உள்ள எண். 7 லோக் கல்யாண் மார்க்கில் (பிரதமர் இல்ல முகாம்) பிரதமர் மோடி வெளியிட்டார்.

சுப்பிரமணிய பாரதியின் எழுத்துக்கள் மக்களிடையே தேச பக்தியை ஊட்டியது. இந்திய கலாசாரம் மற்றும் நாட்டின் ஆன்மிக பாரம்பரியத்தின் சாரத்தை வெகுஜன மக்கள் தொடர்புபடுத்தக்கூடிய மொழியில் மக்களிடம் அவர் எடுத்துச் சென்றார்.

மகாகவியின் முழுமையான படைப்புகளின் 23 தொகுதிகள் சீனி. விசுவநாதனால் தொகுக்கப்பட்டு அல்லயன்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதில் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் எழுத்துகளின் பதிப்புகள், விளக்கங்கள், ஆவணங்கள், பின்னணித் தகவல்கள் மற்றும் தத்துவ விளக்கங்கள் போன்றவை அடங்கி உள்ளது. பாரதி அறிஞர் என்று அழைக்கப்படும் சீனி. விசுவநாதனால் தேசியக் கவி பாரதியின் 23 தொகுதிகள் அடங்கிய முழுப்படைப்புகளும் கால வரிசைப்படி தொகுத்கப்பட்டுள்ளன. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட இந்த தொகுப்புகள் 81 வயதான சீனி.விசுவநாதன் கடந்த 64 ஆண்டுகளாக திரட்டியவையாகும்.



Tags:    

Similar News