இந்தியா

40 தொகுதிகளிலும் வெல்வோம்: பீகாரில் பிரதமர் மோடி உறுதி

Published On 2024-04-04 10:25 GMT   |   Update On 2024-04-04 10:27 GMT
  • பீகார் மாநிலம் ஜமுய் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
  • இதில் பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

பாட்னா:

பிரதமர் நரேந்திர மோடி இன்று பீகார் மாநிலம் ஜமுய் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். இதில் பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

பீகாரில் உள்ள 40 தொகுதிகளிலும் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறும். இதை மக்கள் தீர்மானித்து விட்டார்கள்.

பா.ஜ.க. கூட்டணி மொத்தம் 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றும். இந்த தேர்தல் இந்தியா மற்றும் பீகார் வளர்ச்சிக்கானது. பீகாரை காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரீய ஜனதா தளம் ஆகியவை பலவீனப்படுத்தி வந்தன.

காங்கிரஸ ஆட்சியில் இந்தியா ஏழ்மையாக இருந்தது. தற்போது பா.ஜ.க. ஆட்சியில் இந்தியா வேகமாக வளர்ச்சியடைந்துள்ளது.

பா.ஜ.க.வின் 10 ஆண்டு ஆட்சி வெறும் டிரைலர்தான். வரும் ஆண்டுகளில் இன்னும் அதிக வளர்ச்சியை காணப் போகிறீர்கள். இது என்னுடைய வாக்குறுதி.

அயோத்தியில் ராமர் கோவிலுக்கு எதிராக காங்கிரஸ்-ராஷ்டிரீய ஜனதா தளம் செயல்பட்டன. ராமர் கோவில் கட்டுமானத்தை காங்கிரஸ் தடுத்தது. ஆனால் நாங்கள் கோவிலை கட்டினோம்.

இப்போது உணவுக்காக பிச்சை எடுக்கும் சிறிய நாடுகள் (பாகிஸ்தான்) ஒரு காலத்தில் நம் மீது பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்திவிட்டு வெளியேறின.

காங்கிரஸ் மற்ற நாடுகளுக்கு உதவி கேட்டுச் செல்வது வழக்கம், ஆனால் அது பலிக்காது என தெரிவித்தார்.

Tags:    

Similar News