இந்தியா

பிரதமர் மோடி

9 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக செலுத்தியது இஸ்ரோ - பிரதமர் மோடி வாழ்த்து

Update: 2022-11-26 13:56 GMT
  • பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
  • ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

புதுடெல்லி:

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இஸ்ரோ தயாரித்த

பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்த ராக்கெட் இந்தியாவின் 960 கிலோ எடை கொண்ட 'ஓசன்சாட்-03' (இ.ஓ.எஸ்-06) என்ற புவியை கண்காணிக்கும் செயற்கைக்கோள் மற்றும் 8 நானோ செயற்கைக்கோள்களை சுமந்து சென்றது.

இந்நிலையில், பி.எஸ்.எல்.வி. சி54 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பி.எஸ்.எல்.வி. சி54 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டதற்கு இஸ்ரோ மற்றும் என்.எஸ்.ஐ.எல். நிறுவனத்திற்கு வாழ்த்துக்கள். இ.ஓ.எஸ்-06 செயற்கைக்கோள் நமது கடல் வளங்களை சிறந்த முறையில் பயன்படுத்த உதவும் என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News