இந்தியா
பள்ளி குழந்தைகளுடன் ரக்ஷா பந்தன் பண்டிகையை கொண்டாடினார் பிரதமர் மோடி
- இன்று நாடு முழுக்க ரக்ஷா பந்தன் கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது.
- பெண்கள் தாங்கள் சகோதரர்களாக கருதும் ஆண்களுக்கு ராக்கி கயிறுகளை கட்டி மகிழ்ந்தனர்.
சகோதர பாசத்தை வெளிப்படுத்தும் நோக்கத்தில் கொண்டாடப்படும் ரக்ஷா பந்தன் தினத்தையொட்டி இன்று நாடு முழுவதும் பெண்கள் தாங்கள் சகோதரர்களாக கருதும் ஆண்களுக்கு ராக்கி கயிறுகளை கட்டி மகிழ்ந்தனர்.
நாடு முழுக்க ரக்ஷா பந்தன் கொண்டாட்டம் நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் மோடி பள்ளி குழந்தைகளுடன் ரக்ஷா பந்தன் பண்டிகையை கொண்டாடினார். குழந்தைகள் பிரதமர் மோடிக்கு ராக்கி கயிறு கட்டி மகிழ்ந்தனர்.