வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இமாச்சலப் பிரதேசத்திற்கு ரூ.1500 கோடி நிதியுதவி அறிவித்தார் பிரதமர் மோடி
- இமாச்சல பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மோடி ஹெலிகாப்டரில் பார்வையிட்டார்.
- இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்தார்.
உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்கள் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டன.
இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி இன்று காலை இமாச்சல பிரதேசம் புறப்பட்டு சென்றார். துணை ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்த பிறகு அவர் புறப்பட்டார்.
இமாச்சல பிரதேசத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.
இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இமாச்சலப் பிரதேச மாநிலத்திற்கு பிரதமர் மோடி ரூ.1500 கோடி நிதியுதவி அறிவித்தார்.
மேலும், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணமும் வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்தார்.
இமாச்சல பிரதேச பயணத்தை முடித்த பிறகு இன்று மாலை பிரதமர் பஞ்சாப் செல்கிறார்.