இந்தியா
null

நடுவானில் விமானியின் அறைக் கதவை திறக்க முயன்ற பயணி - ஏர் இந்தியாவில் பரபரப்பு

Published On 2025-09-22 22:37 IST   |   Update On 2025-09-22 22:45:00 IST
  • வாரணாசியில் தரையிறங்கியதும், அந்தப் பயணி மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையினரிடம் (CISF) ஒப்படைக்கப்பட்டார்.
  • அவரிடமும், அவருடன் பயணம் செய்த மற்ற ஏழு பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

இன்று, பெங்களூருவிலிருந்து வாரணாசிக்குச் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்டது.

நடுவானில் ஒரு பயணி விமானியின் அறையான காக்பிட் கதவைத் திறக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

அந்தப் பயணி முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்தவர் என்றும், கழிவறைக்குச் செல்ல முயன்றபோது தவறுதலாக காக்பிட் கதவை திறக்க முயன்றதாகவும் ஏர்லைன்ஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் விமானத்தின் பாதுகாப்பு மீறல் இல்லை என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

காக்பிட் கதவுகள் ரகசியக் குறியீட்டு எண் மூலம் பூட்டப்பட்டிருக்கும். எனவே, அந்தப் பயணியால் கதவை திறக்க முடியவில்லை. விமானம் வாரணாசியில் தரையிறங்கியதும், அந்தப் பயணி மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையினரிடம் (CISF) ஒப்படைக்கப்பட்டார்.

அவரிடமும், அவருடன் பயணம் செய்த மற்ற ஏழு பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அவர்களின் உடமைகளும் மீண்டும் சோதிக்கப்பட்டன.

விமானக் கடத்தல் முயற்சி என்ற சந்தேகம் எழுந்த நிலையில், அந்தப் பயணிக்கு எந்தவொரு தீய நோக்கமும் இல்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

Tags:    

Similar News