G-PAY பயன்படுத்துவதையே நிறுத்திவிட்டேன்.. டிஜிட்டல் பரிவர்த்தனை பழக்கம் பற்றி சானியா மிர்சா சகோதரி அட்வைஸ்
- "சிறு மாற்றங்கள், பெரிய தாக்கம்" என்று தெரிவித்துள்ளார்.
- முதலில் அன்றாட வாழ்க்கை சற்று கடினமாக இருந்ததாக கூறினார்.
டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் சகோதரி அனம் மிர்சா, Google Pay போன்ற டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளால் தனது செலவுகள் அதிகரிக்கிறது என்று கூறி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளார்.
எனவே செலவுகளைக் கட்டுப்படுத்தி சேமிப்பை அதிகரிப்பதற்காக தனது மொபைலில் உள்ள அனைத்து UPI அடிப்படையிலான செயலிகளையும் நீக்கியுள்ளார். "சிறு மாற்றங்கள், பெரிய தாக்கம்" என்ற தலைப்பில் "இந்த ஆண்டு, நான் Google Pay பயன்படுத்துவதை நிறுத்திவிட்டேன்" என்று அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
உடனடி பணப் பரிவர்த்தனை வசதி, திட்டமிடப்படாத செலவுகளை (impulse purchases) ஊக்குவிக்கிறது என்பதால், அதைத் தவிர்க்கவே இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்தார்.
ஆன்லைன் பரிவார்த்தைகளை கைவிட்டதால், ஆரம்பத்தில் நண்பர்களிடம் காபி போன்ற சிறு விஷயங்களுக்கு கூட பணம் கேட்க வேண்டியிருந்ததால், அன்றாட வாழ்க்கை சற்று கடினமாக இருந்ததாகவும், ஆனால் நாளடைவில் அதற்குப் பழகிவிட்டதாகவும் அவர் கூறினார்.
அனம் மிர்சாவின் இந்தச் செயல், டிஜிட்டல் பணம் செலுத்தும் பழக்கவழக்கங்கள் மற்றும் நிதி மேலாண்மை குறித்த விவாதங்களைத் தூண்டியுள்ளது. சிலர் இதை பாராட்டினால், சிலர் கலவையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.