இந்தியா

"ஒரே நாடு ஒரே கணவன் திட்டம்.. எல்லை மீறும் பாஜக" - பஞ்சாப் முதல்வர் பேச்சால் சர்ச்சை

Published On 2025-06-04 02:19 IST   |   Update On 2025-06-04 02:19:00 IST
  • பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பாஜக ஒவ்வொரு வீட்டிற்கும் சிந்தூர் அனுப்பும்
  • எல்லாவற்றிற்கும் எல்லை உள்ளது என்று தெரிவித்தார்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் இறந்ததை அடுத்து, இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை மேற்கொண்டது. இந்த ராணுவ நடவடிக்கையில் நரேந்திர மோடி அரசாங்கத்தின் திறனை வெளிப்படுத்த நாடு தழுவிய பிரச்சாரத்தை பாஜக நாடு தழுவிய பிரசராத்தை அறிவித்து நடத்தி வருகிறது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பாஜக ஒவ்வொரு வீட்டிற்கும் சிந்தூர் அனுப்பும் என்று செய்திகள் வந்தன.

 இந்நிலையில் பஞ்சாபின் லூதியானா நகரில் பா.ஜ.க.வினர்,தேர்தல் பிரசாரத்தின்போது ஆபரேஷன் சிந்தூரை பயன்படுத்துவது பற்றி செய்தியாளர் கேள்விக்கு அம்மாநில முதல்வர் பகவந்த் மான் பதிலளித்து பேசினார்.

அப்போது, இந்த பிரசாரம் பற்றி ஒவ்வொருவரும் கிண்டல் செய்து வருகின்றனர். நீங்கள் இதனை (சிந்தூர்) எடுத்து கொண்டு சென்று உங்கள் மனைவியிடம் கொடுத்து, மோடியின் பெயரால் எடுத்து கொள் என கூறுவீர்களா? என்று அந்த நிருபரிடம் கேட்ட பகவந்த் மான், இது என்ன ஒரு நாடு-ஒரு கணவன் திட்டமா? எல்லாவற்றிற்கும் எல்லை உள்ளது" என்று தெரிவித்தார். 

Tags:    

Similar News