இந்தியா

பிரான்ஸ் பயணத்தின்போது ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார் பிரதமர் மோடி

Published On 2023-07-12 07:27 GMT   |   Update On 2023-07-12 07:31 GMT
  • 3 ஸ்கார்பீன் நீர்மூழ்கி கப்பல்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யான் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை பிரதமர் மோடி சந்திக்கிறார்.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வருகிற 14ம் தேதி அந்நாட்டு தேசிய தினம் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுமாறு பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அழைப்பு விடுத்தார்.

இந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி நாளை மறுதினம் பிரான்ஸ் செல்கிறார். அப்போது இந்தியா 26 ரபேல் விமானங்கள், 3 ஸ்கார்பீன் நீர்மூழ்கி கப்பல்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாதுகாப்புப்படைகளால் பாதுகாப்பு அமைச்சகத்திடம் இதற்கான முன்மொழிவு வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மோடி பயணத்தின்போது அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.

இந்நிலையில், பிரான்ஸ் பயணத்தை தொடர்ந்து பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகத்தில் அபுதாபி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அங்கு, அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யான் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை பிரதமர் மோடி சந்திக்கிறார். 2022ம் ஆண்டுக்குப் பிறகு பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்வது இது இரண்டாவது முறையாகும். கடந்த ஆண்டு ஜெர்மெனியில் நடந்த ஐி7 உச்சி மாநாட்டில் இருந்து திரும்பும் வழியில் பிரதமர் மோடி, அதிபர் அல் நஹ்யானை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News