இந்தியா

அரசு அதிகாரியை எட்டி உதைத்து தாக்குதல்.. ஒடிசா பாஜக தலைவர் கைது

Published On 2025-07-04 08:43 IST   |   Update On 2025-07-04 08:43:00 IST
  • தாக்கி, காலால் எட்டி உதைத்த வீடியோ இணையத்தில் வைரலானது.
  • மாநிலம் முழுவதும் உள்ள ஓ.ஏ.எஸ் அதிகாரிகள் "கூட்டு விடுப்பு" எடுத்திருந்தனர்.

ஒடிசா நிர்வாக சேவை (ஓ.ஏ.எஸ்) அதிகாரி ரத்னாகர் சாஹூ தாக்கப்பட்ட வழக்கில், பாஜக தலைவர் ஜெகந்நாத் பிரதான் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினரிடம் பிரதான் சரணடைந்தார்.

புவனேஸ்வர் மாநகராட்சி (பிஎம்சி) கூடுதல் ஆணையர் ரத்னாகர் சாஹூவை அவரது அலுவலகத்தில் இருந்து இழுத்துச் சென்று ஜெகந்நாத் பிரதானின் ஆட்கள் தாக்கி, காலால் எட்டி உதைத்தனர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.

சாஹூ மீதான இந்த தாக்குதலை கண்டித்து, மாநிலம் முழுவதும் உள்ள ஓ.ஏ.எஸ் அதிகாரிகள் "கூட்டு விடுப்பு" எடுத்திருந்தனர். பிரதான் கைது செய்யப்பட்டதை அடுத்து, அதிகாரிகள் தங்கள் விடுப்பை திரும்பப் பெற்றுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக பிரதான் உட்பட மொத்தம் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Tags:    

Similar News