இந்தியா

இனி 10 வயதுக்கு மேற்பட்ட சிறார்கள் சுயமாக வங்கிக் கணக்கு தொடங்கலாம் - ரிசர்வ் வங்கி

Published On 2025-04-22 13:16 IST   |   Update On 2025-04-22 13:16:00 IST
  • கூடுதல் சேவைகளையும் சிறார்களுக்கு வழங்க முடியும்.
  • வங்கிகள் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறார்களுக்கான வைப்பு கணக்குகளைத் திறப்பதற்கான வழிகாட்டுதல்களை ரிசர்வ் வங்கி திருத்தியுள்ளது.

10 வயதுக்கு மேற்பட்ட சிறார்கள், சேமிப்பு (savings) மற்றும் கால(term) வைப்பு கணக்குகளைத் சுயமாக திறந்து நிர்வகிக்க ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது.

ஆர்பிஐ சுற்றறிக்கையின்படி, வங்கிகள் தங்கள் இடர் மேலாண்மைக் கொள்கையின் அடிப்படையில் நெட் பேங்கிங் சேவை, ஏடிஎம் அல்லது டெபிட் கார்டுகள் மற்றும் காசோலை புத்தகங்கள் போன்ற கூடுதல் சேவைகளையும் சிறார்களுக்கு வழங்க முடியும்.

இருப்பினும், சிறார்களின் கணக்குகள் அதிகமாகப் பணம் எடுக்க அனுமதிக்கப்படுவதில்லை என்பதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News