இந்தியா

முழு வீச்சில் பணி: அடுத்த ஆண்டில் இருந்து பஞ்சாபில் மின்தடை இருக்காது- கெஜ்ரிவால்

Published On 2025-10-08 18:30 IST   |   Update On 2025-10-08 18:30:00 IST
  • பஞ்சாப் மாநிலத்தின் 92 சதவீத மக்கள் இலவசமாக மின்சாரம் பெறுகிறார்கள்.
  • பாசனத்திற்கு குறைந்த பட்சம் 8 மணி நேரம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது

ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் ஆட்சி செய்து வருகிறது. பகவத் மான் முதலமைச்சராக இருந்து வருகிறார். அந்த கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால், மின்மாற்றிகள் மற்றும் வினியோக யூனிட் அமைப்பதற்கான கட்டுமான தொடக்க விழாவில் கலந்து கொண்டார்.

அப்போது, அடுத்த வருடத்தில் இருந்து பஞ்சாப் மாநிலத்தில் மின்தடை இருக்காது என கெஜ்ரிவால் உறுதி அளித்துள்ளார்.

இது தொடர்பாக கெஜ்ரிவால் கூறியதாவது:-

பஞ்சாப் மாநிலத்தின் 92 சதவீத மக்கள் இலவசமாக மின்சாரம் பெறுகிறார்கள். பாசனத்திற்கு குறைந்த பட்சம் 8 மணி நேரம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இது நாள் முழுவதும் வழங்கப்படும் வகையில் விரைவில் ஏற்பாடு செய்யப்படும்.

24 மணி நேரம் மின்சாரம் வழங்குவதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். 25 ஆயிரம் கி.மீ. புதிய பவர் கேபிள் பதிப்பதற்கான கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. 8,000 புதிய மின்சார டிரான்ஸ்பார்மர்கள், 77 புதிய துணை மின் நிலையம் அமைப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த வேலைகள் மிகப்பெரிய அளவில் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. ஒட்டுமொத்த சிஸ்டமும் நவீனமாக்கப்படும். அடுத்த கோடைக்காலத்தில், பஞ்சாபில் மின்தடை என்பதே இருக்காது.

இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

Tags:    

Similar News