இந்தியா

தேர்தலுக்கு முன் எத்தனை பேர்... சாட்டை துரைமுருகன் வழக்கில் உச்சநீதிமன்றம் கேள்வி

Published On 2024-04-08 13:34 GMT   |   Update On 2024-04-08 13:34 GMT
  • யூடியூபில் அவதூறாக பேசிய குற்றச்சாட்டில் சிறையில் அடைக்க தொடங்கினால்,
  • தேர்தலுக்கு முன்னதாக எத்தனை பேர் அடைக்கப்படுவார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள்?

தமிழக முதலமைச்சரை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சாட்டை துரைமுருகனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் ஜாமினை ரத்து செய்த நிலையில், சாட்டை துரைமுருகன் உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தார்.

இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபாய் எஸ் ஒஹா மற்றும் உஜ்ஜல் புயான் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது நீதிபதிகள் "யூடியூபில் அவதூறாக பேசிய குற்றச்சாட்டில் சிறையில் அடைக்க தொடங்கினால், தேர்தலுக்கு முன்னதாக எத்தனை பேர் அடைக்கப்படுவார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள்?. அவருக்கு வழங்கப்பட்ட சுதந்திரத்தை அவர் தவறாக பயன்படுத்தியதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை.

அவதூறாக பேசமாட்டேன் என அவருக்கு நிபந்தனை விதிக்க முடியாது. ஒரு அறிக்கை அவதூறா? அல்லது அவதூறு இல்லையா? என்பது எதை வைத்து தீர்மானிக்கப்படுகிறது? என நீதிபதிகள் தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழங்கறிஞர் முகுல் ரோஹத்கி நோக்கி கேள்வி எழுப்பினர்.

Tags:    

Similar News