இந்தியா

ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களவை தேர்தலில் பாஜக குதிரை பேரம்: தேசிய மாநாடு கட்சி வேட்பாளர் குற்றச்சாட்டு

Published On 2025-10-24 21:15 IST   |   Update On 2025-10-24 21:15:00 IST
  • வெற்றி பெறுவதற்கான எண்ணிக்கை பாஜக-விடம் இல்லை.
  • அவர்களுக்கு 28 எம்.எல்.ஏ.-க்கள் மட்டுமே இருந்தனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு முதன்முறையாக மாநிலங்களவை தேர்தல் நடைபெற்றது. 4 இடங்களுக்கான தேர்தலில் உமர் அப்துல்லாவின் ஆளுங்கட்சியான தேசிய மாநாடு கட்சி 3 இடங்களில் வெற்றி பெற்றது. ஒரு இடத்தில் பாஜக வெற்றி பெற்றது.

பாஜகவுக்கு வெற்றி பெற 4 எம்.எல்.ஏ.-க்கள் ஆதரவு தேவைப்பட்டது. அந்த 4 பேரும் எங்களுக்கு வாக்களிப்பதாக உறுதி அளித்திருந்தனர். பாஜக குதிரை பேரத்தில் ஈடுபட்டதால், 4 பேரும் பாஜக-வுக்கு வாக்களித்துவிட்டனர் என தோல்வியடைந்த தேசிய மாநாடு கட்சி வேட்பாளர் இம்ரான் நபி தார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இம்ரான் நபி தார் கூறுகையில் "வெற்றி பெறுவதற்கான எண்ணிக்கை பாஜக-விடம் இல்லை. அவர்களுக்கு 28 எம்.எல்.ஏ.-க்கள் மட்டுமே இருந்தனர். அப்படி இருக்கும்போது எப்படி அவர்கள் 32 வாக்குளை பெற்றனர்?. இதன்மூலம் குதிரை பேரம் நடந்துள்ளது தெளிவாகிறது" என்றனர்.

வெற்றி பெற்ற மற்ற வேட்பாளர் "காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்ட முடிவு நிராகரிக்கப்பட்டுள்ளது" என்பதை காட்டுகிறது" என்றார்.

Tags:    

Similar News