இந்தியா

 ஜிதேந்திர சிங்

ஆன்லைன் மூலம் பொது தகுதித் தேர்வை நடத்த தேசிய ஆள்சேர்ப்பு நிறுவனம் நடவடிக்கை- மத்திய மந்திரி தகவல்

Published On 2022-07-13 05:41 IST   |   Update On 2022-07-13 05:41:00 IST
  • பொது தகுதித் தேர்வு தொடக்கத்தில் 12 மொழிகளில் நடத்தப்படும்.
  • படிப்படியாக 22 மொழிகளிலும் இந்த தேர்வு நடத்தப்படும்.

பெங்களூரு:

கர்நாடக அரசும், நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையும் பெங்களூருவில் ஏற்பாடு செய்திருந்த மண்டல மாநாட்டில் மத்திய அறிவியல்-தொழில்நுட்பத்துறை இணை மந்திரி டாக்டர் ஜிதேந்திர சிங் நிறைவுரை ஆற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது :

பிரதமர் நரேந்திர மோடியால் அறிமுகம் செய்யப்பட்ட நிர்வாக சீர்திருத்தங்கள் உண்மையில் சாமானிய மக்களின் வாழ்க்கையை எளிதாக்குகின்றன. முன்னேற விரும்பும் இளைஞர்களுக்கு வாய்ப்புகளை வழங்குகின்றன.

சான்றிதழ்களின் உறுதி தன்மையை நிரூபிக்க உயர் அதிகாரிகளிடம் பிரமாண பத்திரம் பெற வேண்டும் என்று முறையை பிரதமர் ரத்து செய்துள்ளார். அரசு பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு நடத்தப்படும் நேர்முக தேர்வும் ரத்து செய்யப்பட்டது.

ஊழியர் நலன் மற்றும் பயிற்சித் துறையின் கீழ் உள்ள தேசிய ஆள்சேர்ப்பு நிறுவனம் உயர் பதவி அல்லாத பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்புக்கு கணினி அடிப்படையில் பொது தகுதித் தேர்வை இந்த ஆண்டு இறுதி வாக்கில் நடத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.

தொடக்கத்தில் 12 மொழிகளில் நடத்தப்படும் இந்தத் தேர்வு படிப்படியாக அரசியல் சட்டத்தில் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள 22 மொழிகளிலும் நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News