இந்தியா

அணை திறப்பதில் தகராறு: ஆந்திரா Vs தெலுங்கானா

Published On 2023-12-01 18:46 IST   |   Update On 2023-12-01 18:46:00 IST
  • நாகார்ஜுன சாகர் அணையை திறப்பதில் இரு மாநிலங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
  • ஆந்திர அதிகாரிகள் அணையின் பூட்டு, சிசிடிவி கேமராக்களை உடைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஐதராபாத்:

நாகார்ஜுனா சாகர் அணையில் மொத்தம் 29 மதகுகள் உள்ளன. இதில் ஒன்று முதல் 13 மதகுகள் வரை தெலுங்கானா மாநிலத்துக்கும், மீதமுள்ளவை ஆந்திர மாநிலத்துக்கும் சொந்தமானது.

இந்த அணையின் பராமரிப்பு மற்றும் நிர்வாகம் ஆகியவை தெலுங்கானா மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்நிலையில், நாகார்ஜுனா சாகர் அணையைத் திறப்பதில் தெலுங்கானா மற்றும் ஆந்திர அரசுகளிடையே திடீரென நேற்று மோதல் ஏற்பட்டது.

தெலுங்கானா அரசால் பூட்டப்பட்ட அணை கேட்டின் பூட்டுகள் மற்றும் சிசிடிவி கேமராக்களை ஆந்திர அரசு அதிகாரிகளால் உடைக்கப்பட்டது.

அணையை திறப்பதில் ஏற்பட்ட மோதலால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுயில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News