இந்தியா

ஓபிசி பட்டியலில் சேர்க்கப்பட்ட முஸ்லிம்கள் - தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கண்டனம்

Published On 2024-04-24 09:30 GMT   |   Update On 2024-04-24 09:30 GMT
  • 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கர்நாடகாவின் மக்கள் தொகையில் 12.92% முஸ்லிம்கள் உள்ளனர்
  • வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் ஓபிசி ஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட 4 சதவீத இடஒதுக்கீடு கடந்தாண்டு ரத்து செய்யப்பட்டது

கர்நாடகாவில் ஓபிசி ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்படும் முஸ்லிம்களுக்கான 4 சதவீத இட ஒதுக்கீட்டை கடந்தாண்டு அம்மாநில பாஜக அரசு ரத்து செய்தது.

வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் ஓபிசி ஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட 4 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு, அந்த ஒதுக்கீடு தலா 2 சதவீதம் என்ற வகையில் வொக்கலிகாக்கள் மற்றும் லிங்காயத்துகளுக்கு பிரித்து கொடுக்கப்பட்டது.

இந்நிலையில், கர்நாடகாவில், முஸ்லிம் மதத்தில் உள்ள அனைத்து சாதிகளையும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் அம்மாநில காங்கிரஸ் அரசு சேர்த்துள்ளதாக அரசின் தரவுகளின்படி தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் பிரிவு-1ல் 17 முஸ்லிம் சமூகங்களும், பிரிவு-2ல் 19 முஸ்லிம் சமூகங்களும் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கர்நாடக அரசின் இந்த முடிவிற்கு தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.

அனைத்து முஸ்லிம்களையும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பது என்பது முஸ்லிம் மதத்தில் கல்வி மற்றும் சமூக ரீதியாக மிகவும் பின்தங்கிய சமூங்களுக்கான சமூக நீதியை குறைக்கும் செயல் என்று பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தெரிவித்துள்ளது.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கர்நாடகாவின் மக்கள் தொகையில் 12.92% முஸ்லிம்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News