இந்தியா
மும்பை பயங்கரவாத தாக்குதல் குற்றவாளி ராணாவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
- ராணாவின் வழக்கறிஞர் அவரது உடல்நிலை குறித்து கவலை தெரிவித்தார்.
- உடல்நிலை குறித்த நிலை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
மும்பை பயங்கரவாத தாக்குதல் குற்றவாளி தஹாவூர் உசேன் ராணாவின் நீதிமன்றக் காவலை ஜூலை 9 ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜூன் 6 ஆம் தேதி நீதிமன்றக் காவல் முடிவடைந்த பிறகு, வீடியோ கான்பரன்சிங் மூலம் ராணா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, சிறப்பு நீதிபதி சந்தர்ஜித் சிங் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
இதற்கிடையில், ராணாவின் வழக்கறிஞர் அவரது உடல்நிலை குறித்து கவலை தெரிவித்ததை அடுத்து, ஜூன் 9 ஆம் தேதிக்குள் அவரது உடல்நிலை குறித்த நிலை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
பாகிஸ்தான்-கனடா தொழிலதிபரும் முன்னாள் பாகிஸ்தான் ராணுவ மருத்துவருமான ராணா, மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.