இந்தியா

மும்பையில் 16 வயது மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 40 வயது டீச்சர்..!

Published On 2025-07-02 18:22 IST   |   Update On 2025-07-02 18:22:00 IST
  • ஆண்டு விழா நடனத்திற்கு தயார் செய்யும்போது மாணவன் மீது ஒரு ஈர்ப்பு.
  • அந்த மாணவனை தன் வலையில் வீழ்த்தி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 40 வயது ஆசிரியை, 16 வயது மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மும்பையில் உள்ள ஒரு பள்ளியில் ஆங்கிலம் ஆசிரியையாக ஒருவர் பணிபுரிந்து வந்துள்ளார். அவருக்கு வயது 40. குழந்தைகள் உள்ளன.

2023-ஆம் ஆண்டு அந்த மாணவன் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். அந்த வருடம் டிசம்பர் மாதம் பள்ளி ஆண்டு விழாவில் நடனம் ஆடுவதற்கான குழுவை அமைக்கும் பணியில் ஆசிரியை ஈடுபட்டுள்ளார். அப்போது அந்த மாணவனால் ஈர்க்கப்பட்டுள்ளார். அதனைத்தொடர்ந்து 2024 ஜனவரி மாதம் அந்த மாணவவை நோக்கி பாலியல் சைகைகளும் காட்டியுள்ளார்.

இதனால் அந்த மாணவன், பயந்து ஒதுங்கியுள்ளான். ஆசிரியையை சந்திப்பதை தவிர்த்துள்ளான். ஆனால் ஆசிரியை அந்த மாணவின் பெண் தோழிகளை பிடித்து (இவர்கள் பள்ளியில் படிக்கவில்லை) பேசுவதற்கு உதவி கேட்டுள்ளார்.

மேலும், அந்த மாணவரிடம், ஆசிரியையின் நண்பர்கள் வயதான பெண்களுடன், இளம் பையன்கள் தொடர்பு வைத்துக் கொள்வது தற்போது சகஜம் எனத் தெரிவித்துள்ளனர். மேலும், அவருக்கு நீ, உனக்கு நீ என இருவரும் படைக்கப்பட்டவர்கள் எனத் தெரிவித்துள்ளனர். இதனால் ஆசிரியையை சந்திக்க மாணவன் முடிவு செய்துள்ளான்.

இதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக அந்த மாணவனை ஆசிரியை காரில் ஏற்றி ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அவனது ஆடைகளை கழற்றி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அடுத்த சில நாட்களில் அந்த மாணவன் பதற்றமான நிலையை உணரும்போது, அதற்கான மாத்திரிகைள் வழங்கியுள்ளார்.

மேலும், நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்துச் சென்று, மது அருந்த வைத்து, பாலியல் தொல்லைக்கு உட்படுத்தியிருக்கலாம் எனவும் விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மாணவனின் செயல்பாட்டில் சந்தேகம் வர, பெற்றோர் அவனிடம் விசாரித்துள்ளனர். அப்போது, மாணவன் தனக்கு நடந்த அவல நிலையை விவரித்துள்ளான். பையன் விரைவில் பள்ளி படிப்பை முடிக்கப் போகிறான். இந்த விசயத்தை அப்படியே மறைத்து விடுவோம். அதன்பின் ஆசிரியை பையனை தொடரமாட்டார் என நினைத்துள்ளனர்.

ஆனால் நிலையை மேலும் மோசமானது. மாணவன் 12ஆம் வகுப்பு முடித்து வெளியேறிய பின்னரும், அந்த ஆசிரியை தொடர்ந்து தொடர்பு கொண்டுள்ளார். அவருடைய வீட்டு வேலைக்காரர் மூலம் அந்த மாணவனை தொடர்பு கொண்டுள்ளார். இதனால் அந்த மாணவின் பெற்றோர், போலீசை அணுகி புகார் அளித்துள்ளனர்.

போலீசார் போக்சோ சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News