இந்தியா

தற்கொலை செய்யும் பகுதியாக மாறி வருகிறதா மும்பை அடல் சேது பாலம்?: 3 நாளில் 2-வது தற்கொலை

Published On 2024-10-03 10:57 IST   |   Update On 2024-10-03 10:57:00 IST
  • திங்கட்கிழமை வங்கி மேலாளர் தற்கொலை செய்து கொண்டார்.
  • புதன்கிழமை (நேற்று) 52 வயத தொழில்அதிபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் தெற்கு மும்பையை நவி மும்பையுடன் இணைக்கும் வகையில் கடலுக்கு மேல் 21.8 கி.மீட்டர் தூரத்திற்கு பிரமாண்ட 6 வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து நேரத்தை குறைக்கும் வகையில் இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே கடலுக்கு மேல் அமைக்கப்பட்டுள்ள மிக நீளமாக சாலை என்ற பெயரை இந்த அடகல் சேது கடல் பாலம் பெற்றுள்ளது.

ஆனால் தற்போது இந்த பாலத்தின் நடுப்பகுதிக்கு செல்லும் சிலர் அங்கிருந்து கடலுக்குள் குதித்து தற்கொலை செய்யும் சம்பவம் அதிகரித்த வண்ணம் உள்ளது.

நேற்று காலை தொழில் அதிபர் பிலிப் ஷா என்பவர் இந்த பாலத்தில் இருந்து குதித்து உயிரிழந்துள்ளார். சென்ட்ரல் மும்பையின் மதுங்கா பகுதியில் வசநித்து வந்த ஷா, தனது காரில் அடல் சேது பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு இடத்தில் காரை நிறுத்தி, கடலில் குதித்து தற்கொலை செய்துள்ளார்.

சிசிடிவி கட்டுப்பாட்டு அறையில் இருந்தவர்கள் பாலத்தின் மீது கார் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளதாக மீட்புக் குழுவினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக மீட்புக் குழு உஷார் ஆனது. அதிகாரிகள் ஷா கடலில் குதித்த பகுதிக்கு விரைந்தனர். அவர்கள் ஷாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோத்து ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

கடந்த சில நாட்களாக அவர் மன அழுத்தத்தில் இருந்தாக தெரிகிறது. இதன் காரணமாக தற்கொலை முடிவை எடுத்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை வங்கி மேலாளர் பணிச்சுமை மற்றும் அழுத்தம் காரணமாக அடல் சேது பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

அடல் சேது கடல் பாலத்தில் மூன்று நாட்களில் இரண்டு பேர் தற்கொலை செய்துள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பாக பெண் ஒருவர் திடீரென குதித்து தற்கொலை செய்ய முயன்றார். அப்போது முடியை பிடித்து இழுத்து அவரை ஒருவர் காப்பாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

போக்குவரத்து சிரமத்தை குறைப்பதற்காக உருவாக்கப்பட்ட பாலம் தற்போது தற்கொலை செய்யும் பகுதியாக மாறி வருகிறதோ? என வாகன ஓட்டிகளம் ஒரு அச்சம் நிலவி வருகிறது.

Tags:    

Similar News