ம.பி.யில் கொடூரம்: ரூ.50 ஆயிரம் கடனுக்காக நண்பனிடம் மனைவியை விற்ற கணவன்
- போலீசிடம் அளித்த புகாரில் தனது கணவர் ஒரு சூதாட்டக்காரர் என்றார்.
- சூதாட்டப் பழக்கத்தால் அவரது கடன் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
போபால்:
மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்ட தலைமையகத்திலிருந்து சுமார் 35 கி.மீ. தொலைவில் உள்ள கன்வான் காவல்நிலையப் பகுதியில் வசித்து வருபவரின் மனைவி இந்தூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், இந்தூரில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
குற்றத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு போலீசார் அதை 'பூஜ்ய' எப்.ஐ.ஆர் ஆக பதிவுசெய்து தார் காவல்துறைக்கு அனுப்பினர்.
அந்தப் புகாரில், தனது கணவர் ஒரு சூதாட்டக்காரர். சூதாட்டப் பழக்கத்தால் அவரது கடன் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கடனில் மூழ்கிய கணவர் தனக்கு பணம் கொடுத்த தனது நண்பர்களில் ஒருவருடன் உடல் உறவு கொள்ளும்படி கட்டாயப்படுத்தினார் என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், கணவர் ஒருவர் தனது மனைவியை ரூ.50,000 கடனை அடைக்க தனது நண்பருக்கு விற்றதாகக் கூறப்படுகிறது. அதன்பின், அவர் அவளை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், தலைமறைவாக உள்ள இருவரையும் பிடிப்பதற்கான தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தனர்.