இந்தியா

தேர்தல் தேதி அறிவித்த பிறகு முதன்முறையாக மோடியுடன் ஒரே மேடையில் வசுந்தர ராஜே சிந்தியா

Published On 2023-11-22 02:41 GMT   |   Update On 2023-11-22 02:41 GMT
  • முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜேவு ஓரங்கட்டப்பட்டதாக தகவல் வெளிவந்த வண்ணம் இருந்தது.
  • பா.ஜனதா வெற்றி பெற்றால், முதல்வர் வேட்பாளர்களில் ஒருவராக கருதப்பட வாய்ப்புள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற 25-ந்தேதி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. நாளையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடையும் நிலையில் பா.ஜனதாவின் தேசிய தலைவர்கள் நேற்று சூறாவளி பிரசாரம் மேற்கொண்டனர்.

பரான் மாவட்டத்தில் உள்ள அன்ட்டா-வில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் மோடியுடன் வசுந்தர ராஜே சிந்தியா கலந்து கொண்டார். இது பா.ஜனதா உயர் தலைவர்களுக்கும், அவருக்கும் இடையில் பிரச்சினைகள் ஏதும் இல்லை. அனைத்தும் நன்றாகவே செல்கிறது என்ற தகவலை கொடுப்பதாக கருதப்படுகிறது.

ராஜஸ்தான் தேர்தல் தேதி அறிவித்த பிறகு, பிரதமர் மோடி வசுந்தர ராஜே சிந்தியாவுடன் ஒரே மேடையில் பிரசாரம் செய்வது இதுதான் முதன்முறை. வசுந்தரா ராஜேவை பா.ஜனதா உயர் தலைவர்கள் புறக்கணிப்பதாகவும், முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட வாய்ப்பு இல்லை எனவும் கருதப்பட்டது. இந்த நிலையில்தான் மோடியுடன் பிரசாரம் மேற்கொண்ட நிலையில் வசுந்தர ராஜே சிந்தியாவும் முதல்வர் வேட்பாளர் போட்டியில் இருப்பதாக கருதப்படுகிறது.

பிரசாத்தின்போது வசுந்தர ராஜே சிந்தியா, "2024 மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் மோடி ஹாட்ரிக் வெற்றி பெறுவார் என நாட்டு மக்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். மோடியின் பலத்தை ஒட்டுமொத்த நாடும் அங்கீகரித்துள்ளது. தற்போது ஒட்டுமொத்த உலகமும் அவரது தலைமையை ஏற்றுக் கொண்டிருக்கிறது" என்றார்.

Tags:    

Similar News