இந்தியா

நேருவுக்கு பிறகு நீண்ட காலம் பிரதமர் பதவி வகித்த மோடி.. இந்திரா காந்தி சாதனை முறியடிப்பு!

Published On 2025-07-25 10:36 IST   |   Update On 2025-07-25 10:36:00 IST
  • இன்றுடன் (ஜூலை 25) 4,078 நாட்கள் தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்துள்ளார்.
  • 4,077 நாட்கள் பிரதமர் பதவி வகித்த சாதனையை மோடி முறியடித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்றுடன் (ஜூலை 25) 4,078 நாட்கள் தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து, ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

இதன் மூலம் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஜனவரி 24, 1966 முதல் மார்ச் 24, 1977 வரை தொடர்ந்து 4,077 நாட்கள் பிரதமர் பதவி வகித்த சாதனையை மோடி முறியடித்துள்ளார்.

இந்திய வரலாற்றில் தொடர்ச்சியாகப் பிரதமர் பதவி வகித்தவர்களில், நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு, மோடி இரண்டாவது இடத்தில் உள்ளார்.  

Tags:    

Similar News