மம்தா பானர்ஜி பெண் புலி: அவர் சரணடையமாட்டார்- மெகபூபா முஃப்தி
- அமலாக்கத்துறை சோதனைக்கு மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு.
- மம்தா பானர்ஜி சரணடையமாட்டார் என மெகபூபா முப்தி ஆதரவு.
மேற்கு வங்க மாநில முதல்வரான மம்தா பானர்ஜி பெண்புலி, அவர் மிகவும் தைரியமானவர். சரணடையமாட்டார் என ஜம்மு-காஷ்மீர் மாநில பிடிபி கட்சி தலைவரும மெகபூபாப முஃப்தி தெரிவித்துள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வியூகம் வகுத்து கொடுக்கும் I-PAC நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதற்கு மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த விவரகாத்தில் மம்தா பானர்ஜிக்கு மெகபூபா முஃப்தி ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மெகபூபா முஃப்தி கூறியதாவது:-
ஜம்மு காஷ்மீரில் அமலாக்கத்துறை அல்லது பிற புலனாய்வு அமைப்புகளின் நடவடிக்கைகள் ஒரு சாதாரண விஷயமாகிவிட்டது, இப்போது நாடு மொத்தமும் அதை அனுபவித்து வருகிறது.
சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட போது, சோதனைகள் நடக்கும்போது, மூன்று முதல்வர்களை சிறையில் அடைக்கப்பட்டபோது. பெரும்பாலான அரசியல் கட்சிகள் மவுனம் காத்தன. தற்போது இந்த நிலைய நாடு முழுவதும் பார்க்க முடிகிறது. மம்தா பானர்ஜி தைரியமானவர். அவர் பெண் புலி, அவர் திறம்பட அவர்களை எதிர்த்து போரிடுவார், சரணடையமாட்டார் என்று நம்புகிறேன்.
இவ்வாறு மெகபூபா முஃப்தி தெரிவித்துள்ளார்.
சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டபோது மெகபூபா முஃப்தி, பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.