இந்தியா

தேர்தல் பணியால் திடீர் பிரபலமான வாக்குச்சாவடி பெண் அதிகாரி

Published On 2024-04-21 06:08 GMT   |   Update On 2024-04-21 06:08 GMT
  • சஹாரன்பூர் வாக்குச்சாவடியில் அதிகாரியாக பணியாற்றிய இஷா அரோரோ ஓட்டுப்பதிவு நடைபெற்ற வாக்குச்சாவடிகளுக்கு சென்று மேற்பார்வையிட்டார்.
  • வீடியோவை பயனர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் முதல் கட்ட தேர்தல் நேற்று முன்தினம் தொடங்கியது. தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்ற நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற முதல் கட்டமாக 8 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற்றது. இதில் ஒரு வாக்குச்சாவடியில் அதிகாரியாக பணியாற்றிய இஷா அரோரோ என்ற பெண் இணையத்தில் வைரலானார்.

அம்மாநிலத்தில் உள்ள சஹாரன்பூர் வாக்குச்சாவடியில் அதிகாரியாக பணியாற்றிய இஷா அரோரோ ஓட்டுப்பதிவு நடைபெற்ற வாக்குச்சாவடிகளுக்கு சென்று மேற்பார்வையிட்டார். இது தொடர்பான வீடியோவை பயனர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இதனால் அவர் திடீரென இணையத்தில் பிரபலமானார். அம்மாநிலத்தில் உள்ள அரோரோ கங்கோங் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மஹாங்கிர் கிராமத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் அதிகாரியாக பணிபுரிபவர் ஆவார். இவர் தனது விடா முயற்சியுடன் பணிபுரிந்தற்காக பயனர்களால் பாராட்டப்பட்டார்.

இதுகுறித்து இஷா அரோரோ கூறுகையில், நான் எனது கடமையை சரியாக செய்கிறேன் என்றார்.


Tags:    

Similar News