இந்தியா

மருத்துவமனை வளாகத்தில் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டு M.B.B.S மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை

Published On 2025-10-11 15:17 IST   |   Update On 2025-10-11 15:32:00 IST
  • மாணவி அங்கு 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
  • இந்த சம்பவம் போலவே தற்போது மீண்டும் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேற்குவங்க மாநிலத்தின் துர்காபூரில் உள்ள ஷோபாபூர் அருகே தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளது. தலைநகர் கொல்கத்தாவில் இருந்து 170 கிலோ மீட்டர் தொலைவில் இந்த மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி உள்ளது.

ஒடிசா மாநிலம் ஜலேஸ் வரை சேர்ந்த மாணவி அங்கு 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று இரவில் 8.30 மாணவி கல்லூரி வளாகத்தை விட்டு ஆண் நண்பருடன் இரவு உணவருந்த வெளியே சென்றுள்ளார். அப்போது ஒரு கும்பல் மாணவியின் நண்பரை தாக்கியுள்ளது.

அந்த இளைஞனை அங்கிருந்து துரத்திவிட்டு,  மாணவியை  தரதரவென இழுத்துச் சென்று மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஒதுக்குபுறமாக பகுதியில் வைத்து அந்த கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. அந்த சமயத்தில் வளாகத்தில் காவலர்கள் யாரும் இல்லை என்று கூறப்படுகிறது.

அந்த மாணவி தற்போது படுகாயங்களுடன் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொல்கத்தாவில் கடந்த ஆண்டு ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரி மாணவி கற்பழித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர் பாக கைது செய்யப்பட்ட சஞ்சய்ராய்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த சம்பவம் போலவே  தற்போது மீண்டும் மருத்துவ மாணவி பாலியல்  வன்கொடுமை சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.      

Tags:    

Similar News