இந்தியா

கேரள மாநிலம் கொல்லம் அருகே அரசு மருந்து கிடங்கில் திடீர் தீ விபத்து

Published On 2023-05-18 01:01 IST   |   Update On 2023-05-18 01:01:00 IST
  • மாவட்ட மருந்துக் கிடங்கில் மருந்துகள் மற்றும் மருந்து உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் வைக்கப்பட்டிருந்தன.
  • 5 தீயணைப்பு வாகனங்களுடன் வீரர்கள் மற்றும் மீட்பு படையினர் விரைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் உலியக்கோவில் தேவி கோவிலுக்கு அருகே உள்ள கேரள மருத்துவ சேவை கழகத்தின் மாவட்ட மருந்துக் கிடங்கில் மருந்துகள் மற்றும் மருந்து உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், இந்த கிடங்கில் நேற்று இரவு 8.45 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தை கவனித்த பாதுகாப்பு ஊழியர்கள், அப்பகுதி மக்களுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, போலீசார் மற்றும் 5 தீயணைப்பு வாகனங்களுடன் வீரர்கள் மற்றும் மீட்பு படையினர் விரைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பிறகு, 3 மணி நேரத்திற்கு மேலாக போராடி வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், கிடங்கின் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஒன்றிரண்டு வாகனங்கள் தீயில் எரிந்து நாசமானது. கிடங்கில் ஏற்பட்ட பொருட் சேதம் குறித்து தகவல் இல்லை.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News