இந்தியா

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் தலைவர் பசவராஜு சுட்டுக்கொலை

Published On 2025-05-22 07:35 IST   |   Update On 2025-05-22 07:47:00 IST
  • இந்தியாவில் மிகவும் தேடப்படும் மாவோயிஸ்ட் தலைவர்களில் பசவராஜும் ஒருவர்.
  • பசவராஜுவை பிடிப்பதற்கு, ரூ.1.5 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது.

மத்திய அரசு நக்சலைட்டுகளை முற்றிலும் அழிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதன் காரணமாக சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்சலைட்டுகளை ஒழிக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

அவ்வகையில், சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர்- பிஜபூர் மாவட்டங்களுக்கு இடையிலான அடர்ந்த காட்டுப்பகுதியில், நான்கு மாவட்டத்தின் மாவட்ட ரிசர்வ் கார்டு (DRG) போலீசார் நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அபூஜ்மாத் மற்றும் இந்திராவாதி தேசிய பூங்கா இடையில் உள்ள அடர்ந்த காட்டில் இருதரப்பினருக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

இதில் 26-க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இந்த சண்டையின்போது பசவராஜு என்று அழைக்கப்பட்டு வந்த மாவோயிஸ்ட் தலைவர் நம்பலா கேசவ் ராவ் கொல்லப்பட்டார்.

இந்தியாவில் மிகவும் தேடப்படும் மாவோயிஸ்ட் தலைவர்களில் ஒருவரான பசவராஜுவை பிடிப்பதற்கு, ரூ.1.5 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News