இந்தியா

மணிப்பூர்: காணாமல் போன இளைஞரை கண்டுபிடிக்கும் முயற்சியை விரைவுப்படுத்துக- கவர்னரிடம் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

Published On 2025-03-27 18:56 IST   |   Update On 2025-03-27 18:56:00 IST
  • 11 நாட்களுக்கு முன்னதாக முகேஷ் என்ற வாலிபர் காணாமல் போனார்.
  • போலீசார் தீவிரமாக தேடிவரும் நிலையில், அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.

மணிப்பூரில் குகி- மெய்தி ஆகிய இரண்டு சமூகத்தினருக்கு இடையிலான மோதல் வன்முறையாக வெடித்தது. மாநில அரசு வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன. ஒரு சமூகத்தினருக்கு ஆதரவாக பாஜக முதல்வர் செயல்படுவதாக மற்றொரு சமூகத்தினர் குற்றம்சாட்டினர். இது தொடர்பாக முதல்வர் பைரன் சிங் பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் முதல்வர் பதவியில் இருந்து விலகினார். ஆகவே மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து இடங்களிலும் அமைதி நிலவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. முதற்கட்டமாக பொது போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே கடந்த 11 நாட்களுக்கு முன்னதாக 20 வயது இளைஞர் லுவாங்தெம் முகேஷ் திடீரென காணாமல் போனார். இவர் கண்டுபிடித்து தரக்கோரி அவரது தாயார் வேண்டுகோள் விடுத்துள்ளார். போலீசார் அவரை தொடர்ந்து தேடிவருகிறது.

இந்த நிலையில் தேடுதல் முயற்சியை விரைவுப்படுத்த வேண்டும் என சபம் நிஷிகாந்த் என்ற எம்.எல்.ஏ., மணிப்பூர் கவர்னர் அஜய் குமார் பல்லாவை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளது.

இது தொடர்பாக எம்.எல்.ஏ. சபம் நிஷிகாந்த் கூறுகையில் "நான் ஆளுநரை சந்தித்து முகேஷ் விசயமாக ஆலோசனை நடத்தினேன். ஆளுனர் இந்த விசயம் தொடர்பாக அனைத்தையும் தெரிந்து வைத்துள்ளார். தற்போதைய அப்டேட் உடன் உள்ளார்" எனத் தெரிவித்துள்ளார். கெய்சம்தோங் என்ற தொகுதியில் இருந்து சுயேட்சை வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டவர் சபம நிஷிகாந்த் என்பவர் குறிப்பிடத்தக்கது.

முகேஷ் கடைசியாக பிஷ்னுபூர் மாவட்த்தில் உள்ள சினிகோன் பகுதியில் தென்பட்டுள்ளார். கடைசியாக அவர் செல்போன் குகி பிரிவனர் அதிக வசிக்கும் நோனி மாவட்டம் ஜோயுஜாங்டெக் பகுதியில் லொகேசன் காட்டியுள்ளது. ஆனாலர் சரியான இடத்தை போலீசாரால் இன்னும் கண்டறிய முடியவில்லை.

"எந்தப் பெற்றோரும் தங்கள் குழந்தைகளை இழக்கும் வேதனையைத் தாங்கக்கூடாது. என் மகனின் உயிருக்காக நான் கெஞ்சுகிறேன்" என முகேஷின் தாயார் மகனை கண்டுபிடித்து தரக்கோரி வேதனையுடன் கோரிக்கை வைத்துள்ளார்.

Tags:    

Similar News