இந்தியா

மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு- பயங்கரவாதி ஷாரிக் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ்

Published On 2023-03-07 03:08 GMT   |   Update On 2023-03-07 03:08 GMT
  • மங்களூரு டவுன் நாகுரி பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு வெடித்தது.
  • ஷாரிக் வாயை திறக்கும் பட்சத்தில் குண்டுவெடிப்பில் தொடர்புடைய மேலும் சிலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்களூரு:

கர்நாடகத்தின் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு டவுன் நாகுரி பகுதியில் கடந்த ஆண்டு (2022) நவம்பர் மாதம் 19-ந் தேதி ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் அந்த குக்கர் குண்டை ஆட்டோவில் கொண்டு சென்ற பயங்கரவாதி முகமது ஷாரிக் என்கிற ஷாரிக்(வயது 24) பலத்த தீக்காயம் அடைந்தார்.

முதலில் அவர் மங்களூருவில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17-ந் தேதி மேல்சிகிச்சைக்காக மங்களூருவில் இருந்து பெங்களூருவுக்கு அவர் மாற்றப்பட்டார். இந்தநிலையில், 3 மாதங்களாக விக்டோரியா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஷாரிக் நேற்று மதியம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதை தொடர்ந்து, பயங்கரவாதி ஷாரிக்கை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். தொடர்ந்து பெங்களூருவில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் ஷாரிக்கை ஆஜர்படுத்திய அதிகாரிகள், அவரை 10 நாட்கள் காவலில் எடுத்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஷாரிக் வாயை திறக்கும் பட்சத்தில் குண்டுவெடிப்பில் தொடர்புடைய மேலும் சிலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மங்களூரு குக்கர் குண்டுவெடிப்புக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News