தொடர்ந்து பழக விரும்பாத பெண் தோழி: தந்தை கண் முன்னே கழுத்தை அறுத்து கொலை செய்த நபர்..!.
- தன்னுடைய பழகிய பெண் தோழி திடீரென பேச்சை நிறுத்தியதால் கொலை செய்ய முடிவு.
- மார்க்கெட்டில் தந்தையுடன் வரும்போது, கழுத்தை அறுத்துக் கொலை.
மேகாலயா மாநிலத்தில் பெண் தோழி, தன்னுடன் பழகுவதை திடீரென நிறுத்தியதால் கோபத்தில் தந்தை கண் முன்னே கழுத்தை அறுத்து வாலிபர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேகாலயா மாநிலம் மவ்காப் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஃபிர்னைலின் கார்சின்டிவ். இவருடன் வாலிபர் ஒருவர் பழகி வந்துள்ளார். நாட்கள் ஆக ஆக, அந்த நபரின் செயல்களால் வெறுப்படைந்த ஃபிர்னைலின் கார்சின்டிவ், அவருடன் பழகுவதை நிறுத்தியுள்ளார்.
அந்த நபர் தொடர்ந்து வற்புறுத்திய போதிலும், ஃபிர்னைலின் கார்சின்டிவ் பேசுவதை முற்றிலுமாக தவிர்த்து வந்துள்ளார். இதனால் அந்த நபருக்கு கோபம் தலைக்கேறியுள்ளது. பெண் தோழியை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார்.
நேற்று ஃபிர்னைலின் கார்சின்டிவ் தனது தந்தையுடன் மார்க்கெட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, அந்த நபர் ஃபிர்னைலின் கார்சின்டிவ் உடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். கண்ணிமைக்கும் நேரத்திற்குள் ஃபிர்னைலின் கார்சின்டிவின் கழுத்தை அறுத்துள்ளார்.
இதனால் என்ன செய்வதென்று அவரது தந்தை செய்வதறியாமலம் நிற்க, அந்த நபர் ஓட முயன்றுள்ளார். ஆனால் மார்க்கெட்டில் உள்ள மக்கள் அவரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
துடிதுடித்துக் கொண்டிருந்து தனது மகளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்ததாக அறிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இறந்த பெண்ணிற்கு நீதி வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.